`இனி அமைதி காக்க முடியாது!’ - ராஜஸ்தான் போலீஸை எச்சரிக்கும் வீரலட்சுமி

ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி உண்மையான ஹீரோ என்று மக்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். 

வீரலட்சுமி
 

இந்நிலையில் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “தமிழரின் உயிர் மனித உயிர் கிடையாதா. மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைக் கடலில் சுட்டுப் படுகொலை செய்கிறீர்கள். கொத்தனார் வேலை செய்ய ஆந்திரா வந்தால் அங்கும் கொலை செய்கிறீர்கள். தற்போது கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக காவல் ஆய்வாளரையும் சுட்டுக் கொன்றுவிட்டீர்கள். இதற்கு மேல் எங்களால் அடங்கிப்போக முடியாது. அமைதி காக்கவும் முடியாது. தமிழகத்துக்குப் பிழைக்க வந்த ராஜஸ்தானிகளாகிய நீங்கள், இங்கிருந்து நகையைத் திருடி உங்கள் மாநிலத்துக்கு எடுத்துச் செல்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களைப் பிடிக்கவந்த வீரத் தமிழரையும் சுட்டுக் கொன்றுவிட்டீர்கள். தமிழரின் உயிர் அவ்வளவு ஏளனமா. இன்னும் 15 நாள்களுக்குள் பெரியபாண்டியைக் கொன்ற குற்றவாளிகளை ராஜஸ்தான் அரசு தமிழகத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் தமிழகத்தில் வசிக்கும் ராஜஸ்தான் மக்களுக்கு எதிராக வன்முறை வெடிக்கும் என்று தமிழக முன்னேற்றப் படை எச்சரிக்கிறது” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!