ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பேரறிவாளன்

பேரறிவாளன், மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காகப் புழல் சிறையிலிருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

பேரறிவாளன்

ராஜீவ் கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு, கடந்த நவம்பர் 20-ம் தேதி, சிறுநீரகம், ரத்தம் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. சோதனைக்குப் பின், அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைசெய்தனர். அதன்பேரில், புழல் மத்திய சிறைக்கு மாற்றும்படி பேரறிவாளன் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது

இதையடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், புழல் மத்திய சிறைக்கு நேற்று மாற்றப்பட்டார். இதற்கான அனுமதியைச் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஏற்கெனவே வழங்கிவிட்டநிலையில், சிறைத்துறை நடைமுறைகளை முடித்துவிட்டு, நேற்று காலை 10 மணியளவில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். பேரறிவாளன், மருத்துவ சிகிச்சைக்காகப் புழல் மத்திய சிறையில் ஒரு மாதம் இருப்பார் என்று தெரிகிறது. 

இந்நிலையில், இன்று காலை மருத்துவ சிகிச்சைக்காக புழல் சிறையிலிருந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இன்றைய சிகிச்சையின்போது சிறுநீரகத் தொற்று, ரத்த அழுத்தம், எலும்பு, நரம்பு தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!