வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (15/12/2017)

கடைசி தொடர்பு:13:20 (15/12/2017)

வறுமைக்கிடையே மாணவனின் நேர்மை! பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்

றுமைக்கிடையே கீழே கிடந்த 21 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து போலீஸில் ஒப்படைத்த துப்புரவுத் தொழிலாளியின் மகனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கிப் பாராட்டினார். 

துப்புரவுத் தொழிலாளி மகனுக்குப் பாராட்டு

சென்னை திருவொற்றியூர், பெரியார் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஜிப்சன் என்ற மாணவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இவரின் பெற்றோர் தாத்தையா, பிரசன்னகுமாரி, இருவருமே துப்புரவுத் தொழிலாளிகள். ஜிப்சன் 9-ம் தேதி பள்ளிக்குச் செல்வதற்காக எல்லையம்மன் கோயில் பேருந்து நிலையத்துக்குச் சென்றான். பேருந்து நிலையம் அருகே, ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்த மாணவன், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பஞ்சநாதனிடம் கொண்டு ஒப்படைத்தான்.

தலைமைஆசிரியர் பஞ்சநாதன், மாணவனையும் அழைத்துக்கொண்டு திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று விவரங்களைக் கூறி ஒப்படைத்தார். அந்த சமயத்தில் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் இல்லை. போலீஸார் மாணவனின் நேர்மை குறித்து, அவருக்குத் தகவல் அளித்தனர். வியப்படைந்த அவர், உடனடியாக மாணவன் ஜிப்சனைச் சந்தித்துப் பாராட்டியயோடு பரிசும் வழங்கினார். 

ஜிப்சஸ் கண்டெடுத்த பணத்துக்குச் சொந்தமானவர்கள் உரிய ஆதாரத்துடன் அணுகினால் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க