கடலூர் ஆய்வில் ஆளுநருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

கடலூரில் தூய்மை இந்தியா திட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் தமிழக ஆளுநர். அப்போது, திடீரென்று பாத்ரூமில் ஆளுநர் புகுந்ததால் அப்பகுதியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.


 

கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டத்தில் ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டார். அப்போது, வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதிக்குச் சென்ற அவர், திடீரென்று தன்னுடைய காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார். ஆய்வுக்காக, அங்கு பக்கத்திலிருந்த வீட்டு பாத்ரூம் ஒன்றில் நுழைந்தார். அங்கு கீற்று மறைப்பில் குளித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர், இவரைக் கண்டதும் பதறிப்போனார். என்ன ஏது என்று தெரியாமல் பதறிய அந்த பெண்மணி, பக்கத்தில் கிடந்த துணிகளை வாரி உடலில் சுற்றிக்கொண்டு திடுதிப்பென்று வீட்டுக்குள் புகுந்துக்கொண்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள், 'இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்லையே' என்று அதிர்ந்துபோனார்கள். அப்போது சிலர், 'ஒரு ஆளுநர் எங்க போறார், வர்றார்ன்னுகூட தெரியாத அதிகாரிகள். இது எதிர்பார்க்காமல் நடந்தது. வெளியில் சொல்ல முடியாது. அதே இடத்தில் ஏதோ ஒரு சமூக விரோதி மறைந்து இருந்து ஆளுநருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன செய்வது" என்று அதிகாரிகளிடமும் காவல்துறையினரிடமும் எகிறினார்கள். அதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!