வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (15/12/2017)

கடைசி தொடர்பு:16:20 (15/12/2017)

`யாரும் அழ வேண்டாம்' - மகனின் இறுதிச்சடங்கில் உருகிய தாய்

கேரளாவை 25 வயது வினுவின் மரணம் அதிர வைத்துள்ளது. ட்ராவல் செய்வதில் அலாதி பிரியம் கொண்ட, வினு லிம்கா சாதனையாளர். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3,888 கிலோ மீட்டர் தூரத்தை காரில், 57 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தவர். 13 மாநிலங்களைக் கடந்து இரண்டரை நாள்களில் லிம்கா சாதனைக்குச் சொந்தக்காரராகியிருந்த வினு, இளம் வயதிலேயே மரணம் அடைவார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். டிசம்பர் 5-ம் தேதியன்று செங்கானுரில் டூவீலரில் வந்துகொண்டிருந்த, வினு மீது, சுற்றுலா வாகனம் மோத. சம்பவ இடத்திலேயே பலியானார் அவர். 

இறந்த மகனின் உடல் முன் மேரியம்மா

வினுவின் தந்தை ஜாக்கப் குரியன் பிசினஸ்மேன். தாயார் மேரியம்மா ஆசிரியை. வினுவின் உடலைப் பார்த்து மேரியம்மா ஒரு சொட்டு கண்ணீர்கூட சிந்தவில்லை. வினுவின் இறுதிச்சடங்கின்போது, 13 நிமிடங்கள் மேரியம்மா உடைந்த குரலுடன் பேசினார். அந்த வீடியோ தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகியிருக்கிறது. 5 லட்சம் பேர் அதைப் பார்த்துள்ளனர். 5,300 பேர் ஷேர் செய்திருந்தனர். மலையாளத்தில் பேசிய அவரின் பேச்சின் தமிழாக்கம் இங்கே...

''வாழ்க்கையில் தெய்வத்தின் விருப்பத்தின்படி என் மகன் முன்னே செல்கிறான். எனக்கு முன்னரே தெய்வம் அவனைக் கண்டது. என் ரத்தத்தில் அவன் உருவானபோதும் அவனை தெய்வம்தான் பார்த்துக்கொண்டது. கடவுள்தான் அவனை எனக்கு கொடுத்தார். இப்போது, அவர் திருப்பிக் கேட்கிறார். நான் அவரிடம் அவனைக் கொடுத்துவிட்டேன். சொர்க்கத்தில் தெய்வ தூதர்களுடன் அவன் இருப்பான். அவனை சந்தோஷமாகக் கடவுளிடம் அனுப்பி வைக்க வேண்டும். இங்கு கூடியிருக்கும், யாரும் அழ வேண்டாம். 'dont worry child dont worry child heavan have a plan for you' என்ற பாடலை அவன் அடிக்கடி பாடுவான். என் மகனைச் சொர்க்கத்துக்கு கூட்டிக்கொண்டு சென்றது என்னோட கடவுள். அவரோட விருப்பத்துக்கு எதிராக நானோ.. இந்த உலகத்தில் யாருமே செயல்பட முடியாது. கடவுளின் விருப்பத்தின்படி இது நடந்துள்ளது. சாத்தானின் கைங்கர்யம் இல்லை'' என்று பேசியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க