ஆளுநர் பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி இரண்டு பேர் பலி! போலீஸ் வாகனத்தை நொறுக்கிய பொதுமக்கள்!

கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது வண்டிப்பாளையம் பகுதியில் திடீரென காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி, அருகில் உள்ள வீட்டின் பாத்ரூமில் நுழைந்தார். அப்போது குளித்துக்கொண்டிருந்த பெண்மணி அதிர்ந்து வெளியே ஓடினார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்கு முன்பே ஆளுநரின் வாகனம் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காகக் கடலூருக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆய்வுப்பணியை முடித்துவிட்டு  கிழக்கு கடற்கைரை சாலை வழியாக சென்னை திரும்பினார். அமைச்சர்கள், அதிகாரிகள் இந்த வழியாகச் செல்லும்போது காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், காஞ்சிபுரம் காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பது வழக்கம். அதுபோல் இன்று ஆளுநர், கடலூரிலிருந்து சென்னை செல்லும்போது பாதுகாப்புக்குச் சென்ற வாகனம் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான முட்டுக்காடு பகுதியில் வழியனுப்பிவிட்டு திரும்பி வந்தது.அப்போது மாமல்லபுரம் அருகே புதுகல்பாக்கம் பகுதியில் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் மற்றும் அவருடன் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என இரண்டுபேர் சம்பவ இடத்திலேயே பலியாகினார்கள். இதையடுத்து அங்கிருந்த மக்கள் திரண்டு பாதுகாப்புக்கு வந்த இரண்டு வாகனங்களையும் அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெறும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கௌசல்யா என்ற மூதாட்டி மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை கொண்டுசெல்லும் வழியில், அவர் உயிர் பிரிந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!