வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (15/12/2017)

கடைசி தொடர்பு:19:30 (15/12/2017)

'இந்தப் படை போதுமா?' - வெளிநாட்டினரை வியக்கவைத்த தமிழக விவசாயி போராட்டம்!

உலக அளவில் வர்த்தகத்துக்கான முக்கிய அமைப்பாக உலக வர்த்தக அமைப்பு கருதப்படுகிறது. 


இந்த அமைப்பு உலக நாடுகளுக்கு விவசாயிகளுக்கான மானியத்தை குறைக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் அரசு வழங்கும் மானியம் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த உலக வர்த்தக அமைப்புக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புக் குரலையும் பதிவு செய்து வருகிறார் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் 'சொல்லேர் உழவன்' கு.செல்லமுத்து. இவர், உலக வர்த்தக அமைப்புக்கு எதிராக அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில், கடந்த 12-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். அங்கிருந்த தென்அமெரிக்க இளம் விவசாயிகளுடன் கலந்துகொண்டு தமிழ் மொழியில் முழக்கமிட்டார்.  இதை ஆச்சர்யமாகப் பார்த்த வெளிநாட்டினர், அவரை உற்சாகப்படுத்தி, போராட்டத்தில் அவர்களும் பங்கெடுத்தனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க