வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (15/12/2017)

கடைசி தொடர்பு:21:40 (15/12/2017)

ஓடும் பேருந்தை வழிமறித்து இளைஞரை வெட்டிக்கொன்ற கும்பல்! வாடிப்பட்டி அருகே பரபரப்பு

வாடிப்பட்டி அருகே ஓடும் பேருந்தை மறித்து இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனிச்சயம் பிரிவில் வத்தலக்குண்டிலிருந்து மதுரை வந்து கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த மதுரை கரிமேட்டை சேர்ந்த அமர் (எ) அமரேஸ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வத்தலகுண்டிலிருந்து கிளம்பிய பேருந்தை கார் மற்றும் டூவீலரிலும் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல், வாடிப்பட்டி தனிச்சியம் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்த பேருந்தை தடுத்து நிறுத்தினர். பேருந்து நின்றவுடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஏறிய அந்தக் கும்பல், பேருந்துக்குள் அமர்ந்திருந்த அமரை வெட்டிக்கொன்ற பின் சாவகாசமாக வந்த வாகனங்களில் ஏறிச் சென்றுள்ளனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்ட அமரேஸ் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க