கடலூரில் ஆளுநர் ஆய்வு சர்ச்சை விவகாரம்..! ஆளுநர் மாளிகை விளக்கம்

பெண் குளிக்கும்போது, பாத்ரூம் கதவை ஆளுநர் திறந்து பார்த்ததாக வந்த செய்திக்கு ஆளுநர் அலுவலகம் மறுப்பு மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. 


கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்காக, அம்பேத்கர் நகரிலுள்ள ஒரு வீட்டு பாத்ரூம் ஒன்றில் நுழைந்தார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் ஆளுநருக்கு கடுமையான கண்டங்கள் குவிந்துவருகின்றன. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், 'பெண் குளிக்கும்போது, ஆளுநர் பாத்ரூம் கதவை திறந்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது இழிவானது மற்றும் தவறானது. கடலூர் மாவட்டத்தில், ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளை பார்வையிட ஆளுநர் சென்றிருந்தார். திருமதி.கௌரி என்பவரது வீட்டின் கழிவறையை முதலில், பெண் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார். பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர், கழிவறையை பார்வையிட்டார். அதன்பிறகுதான், காலியாக இருந்த கழிவறையை ஆளுநர் பார்வையிட்டார். ஆனால், தொலைக்காட்சிகளில் இதுதொடர்பாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. வரும் காலங்களில், ஆளுநர் தொடர்பான விவகாரங்களை, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த பிறகே வெளியிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!