வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (16/12/2017)

கடைசி தொடர்பு:07:46 (16/12/2017)

டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசு!

டெங்கு கொசு

இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இத்தகவலை, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலால் 21 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டனர். இது, நாட்டிலேயே மிக அதிக அளவாகும். 2014-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு  2 ஆயிரத்து 804 பேரும், 2015-ம் ஆண்டில் 4 ஆயிரத்து 535 பேரும் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழகத்தில் 2 ஆயிரத்து 531 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு  21 ஆயிரத்தைத் தாண்டியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், நாடு முழுவதும் டெங்கு நோய்க்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 482 பேர் பாதிப்புக்குள்ளாயினர். கேரளாவில் மட்டும் 19 ஆயிரத்து 695 பேர்  டெங்குவால் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க