வி.ஏ.ஓ-க்கள் புறக்கணிப்புப் போராட்டம்! சான்றிதழ்கள், பட்டா கிடைக்காமல் மக்கள் அவதி

தமிழகம் முழுவதும் ஆன் லைன் மூலம் சான்றிதழ்கள், பட்டாக்கள் வழங்க பரிந்துரைசெய்துவந்ததை நிறுத்தியுள்ளனர், புறக்கணிப்புப் போராட்டம் நடத்திவரும் கிராம நிர்வாக அலுவலர்கள்.

சான்றிதழ்

'ஏன் இந்தப் போராட்டம்' என்று கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மதுரை மாவட்ட அமைப்புச் செயலாளர் சீதாவிடம் கேட்டோம், "ஆன்லைனில் சான்றிதழ் வழங்க எங்களுக்கு லேப்டாப் மட்டும் வழங்கியுள்ளனர். இன்னும் சிலருக்கு அதுவும் கொடுக்கவில்லை. மோடம், நெட் கனெக்டுக்கான செலவுத்தொகை, ஐந்து வருடங்களாக வழங்கப்படவில்லை. சொந்தப் பணத்தைச் செலவழித்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல், அதிகமான பணிச்சுமை, இட மாறுதல் வழங்காமல் இழுத்தடித்தல் போன்ற பல சிரமங்களுக்கு ஆளாகிவருகிறோம். பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளாததால், கடந்த 14-ம் தேதி முதல் ஆன்லைன் பரிந்துரைகளை நிறுத்திவைத்துப் போராட்டம் நடத்திவருகிறோம். அரசு எங்களுக்கான நிதியை ஒதுக்கியும் மாவட்ட நிர்வாகம் அதை வழங்காமல் அலட்சியம் காட்டுகிறது. தற்போது, எங்கள் மாநிலத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவெடுக்கப்பட்டால், நாங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம்" என்றார்.

தமிழகம் முழுவதும் 12,563 வி.ஓ.க்கள் உள்ளனர். இதில், 2,474 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு நாளைகு 1.5 லட்சம் சான்றிதழ்கள், வி.ஏ.ஓ-க்கள் பரிந்துரையால் வழங்கப்படுகிறது. ஒரு சான்றுக்கு 60 ரூபாய் அரசால்  வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு வருமானம் வந்தும் வி.ஏ ஓ.க்களுக்கு செலவுத்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகச் சொல்கிறார்கள். தற்போது, சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!