மலைக் கிராமத்தில் ஒரு நூலகம்!

கோவை, கொண்டனூர் மலைக் கிராமத்தில், பழங்குடி மக்களுக்காக நூலகம் திறக்கப்பட்டது.

நூலகம்

கோவை ராமகிருஷ்ணா கல்லூரி, ஆனைகட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடத்தியது.  அதில், ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, சர்வதேச மலைகள் தினத்தை முன்னிட்டு, தூய்மைப் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். குறிப்பாக, பயன்பாட்டில் இல்லாத ஒரு கட்டடத்தைச் சீர்செய்து, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி, கொண்டனூர் பகுதியில் உள்ளகொரு கட்டடத்தைச் சீரமைத்து, அதை நூலகமாக மாற்றியுள்ளனர்.

பழங்குடி மக்களுக்காக திறக்கப்பட்டுள்ள இந்நூலகத்தில் வரலாறு, அறிவியல் நூல்கள் மற்றும் விவேகானந்தர், அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் புத்தகங்கள் என 1,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.  இதேபோல, பழங்குடி மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கும்பொருட்டு, கொண்டனூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு 5 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கண்டிவல்லி, தூமனூர் ஆகிய மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பழங்குடி மாணவர்கள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!