வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (16/12/2017)

கடைசி தொடர்பு:16:40 (16/12/2017)

`என் சுதந்திரமே பறிபோய்விட்டது' - புலம்பும் எடப்பாடி பழனிசாமி அண்ணன்

எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோதுகூட அவர் அண்ணன் கோவிந்தராஜ் ஜாலியாக வெளியே சுற்றித் திரிந்தார். ஆனால், தம்பி முதல்வரான பிறகு சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டுக்குக்கூட 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதால் ஜாலியாக வெளியே போக முடிவதில்லை என்று தன் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார் முதல்வரின் அண்ணன் கோவிந்தராஜ்.

இதுபற்றி சிலுவம்பாளையத்தில் உள்ள கோவிந்தராஜின் நண்பர்களிடம் கேட்டதற்கு, ''முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறுவயதிலேயே அப்பா, அம்மாவுக்கு அடக்கமான பிள்ளை. வீட்டிலோ காட்டிலோ இருக்கும் வேலைகளைப் பார்த்துகிட்டு அமைதியாக இருப்பார். வளர்ந்து இளைஞர் ஆனபோதுகூட தனக்கான ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு நண்பர்களிடம் பழகுவார். தேவையில்லாமல் வீண் வம்புக்கு போகமாட்டார். ஆனால், அவருடைய அண்ணன் கோவிந்தராஜ் அப்படி இல்லை. அவருக்கு நேர் மாறானவர். சிறு வயதில் இருந்தே அவுங்க அப்பா, அம்மாவுக்கு அடங்க மாட்டார். வீட்டிலும் காட்டிலும் வேலை பார்க்காமல் பசங்ககூட சேர்ந்துகிட்டு ஜாலியாக ஊர் சுற்றுவார்.  நண்பர்கள்கூட சேர்ந்துகொண்டு வம்பு, சண்டையை இழுத்துட்டு வந்துவிடுவார். அதனால் பெற்றோருக்கு பழனிசாமியைத்தான் பிடிக்கும். கோவிந்தராஜ் அண்ணனைப் பிடிக்காது. கோவிந்தராஜ் மனைவி பானுமதி உடநிலை சரியில்லாமல் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ரதிப்ரியா என்ற ஒரு மகளும் நவீன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இருவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.

ஃலைப்பை ஜாலியாக என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைக்கக்கூடியவர் கோவிந்தராஜ் அண்ணன். எங்க கிராமத்தில் உள்ள அவருடைய நண்கள் பந்தா குமாரு, வெள்ளரிவெள்ளி அசோக், ரவி, துறை என்கின்ற மாதேஸ்வரன், வளத்தி குமார் ஆகியோரோடு எப்போதும் ஜாலியாக ஊருக்குள் வலம் வருவார். திடீர் திடீரென ப்ளான் போட்டு ஊட்டி, கொடைக்கானல், ஒகேனக்கல்  போய் சரக்கோடு, சிக்கன், மட்டன் சாப்பிட்டு மஜா பண்ணிட்டு வருவார்கள். கோவிந்தராஜ் அண்ணன் வீட்டில் தனியாக இருப்பதால் அவருடைய நண்பர்கள் அடிக்கடி அவருடைய வீட்டுக்கு வரப் போக இருப்பார்கள். தன் தம்பி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கும்போது வரை இப்படிதான் இருந்தார். எப்ப அவருடைய தம்பி முதல்வர் ஆனாரோ அப்போதிலிருந்து கோவிந்தராஜ் அண்ணனுக்கு சுதந்திரம் பறிபோய் விட்டது.

அவருடைய தம்பி பழனிசாமி, ''நண்பர்களோடு சேர்ந்துகொண்டு தேவையில்லாமல் யாரிடமும் பிரச்னைக்கு போகக் கூடாது. ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் வீட்டிலேயே வாங்கிட்டு வரச் சொல்லி சாப்பிட வேண்டும். எந்தப் பத்திரிகையாளர்கள் வந்து பேட்டி கேட்டாலும் கொடுக்க கூடாது'' என்று சொல்லி கோவிந்தராஜ் அண்ணனுக்கு கடிவாளம் போட்டுவிட்டார். இதனால் கோவிந்தராஜ் அண்ணன் வீட்டோடு முடங்கிவிட்டார். போதா குறைக்கு வீட்டின் கேட்டுக்கு முன்னே 2 காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் இருந்ததால் கோவிந்தராஜ் அண்ணனுக்கு சுத்தமா சுதந்திரமே இல்லாமல் போய்விட்டது. யாரும் வீட்டுக்குள் வர முடிவதில்லை. இவரும் வெளியில் செல்ல முடியவில்லை என தன் நண்பர்களிடம் கோவிந்தராஜ் அண்ணன் புலம்பி வருகிறார்'' என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க