எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதியலாம்! காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய்யின் தந்தை ஏ.எஸ்.சந்திரசேகர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்திரசேகர்

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில நாள்களுக்கு முன்பு நடந்த 'விசிறி' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, நாட்டில் லஞ்சம் பெருகியுள்ளது. கடவுளுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று திருப்பதி கோயில் காணிக்கையைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நாராயணன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார். 

ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் நாராயணன், `மனுதாரர் நாராயணன் தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகப் போலீஸார் கருதினால் இந்தப் பிரச்னை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யலாம்' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!