`முந்தைய மாத தொகையினை செலுத்தினால் போதும்': ஒகி புயலால் மின்சார வாரியம் முடிவு

கடந்த நவம்பர் மாதம் ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை கடுமையாக தாக்கியதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டது. அதுபோல மின்வாரியம் தொடர்பான எந்த ஒரு வெளிப்புற பணிகளும் புயல் காற்று காரணமாக நடை பெறவில்லை. இதனால் பல இடங்களில் மின் கணக்கீட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் முந்தைய மாத கட்டண தொகையினை செலுத்தும்படி மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய கொட்டாரம் உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒகி புயலின் காரணமாக மின்சாரம் தடைபட்டது. இதனால் சுசீந்திரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட ஆசிரமம், சந்நதி தெரு, ஒசரவிளை, குலசேகரகபுரம் மின் பகிர்மானங்கள், கீழ கிருஷ்ணன் புதூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட முகிலன்விளை, ஆத்திக்கட்டு விளை மின் பகிர்மானங்கள், தெங்கம்புதூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பறக்கை ஏ5, பறக்கை 6 மின்பகிர்மானங்களில் மின் கணக்கீட்டு பணியினை மேற்கொள்ளப்பட இயலாத நிலை ஏற்பட்டது.

 

எனவே, மின் நுகர்வோர்கள் முந்தைய மாத கணக்கீட்டு தொகையினை செலுத்துபடி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கம்பங்கள் விழுந்து சேதமடைந்த வீடுங்களுக்கு நிவாரணயத் தொகை வழங்கப்படுமா எனவும் மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!