கன்னியாகுமரி மாவட்ட பந்த்... 40 பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயல் காரணமாக இறந்துபோன அனைவரின் குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ற இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து விவசாய அமைப்புகளுடன் காங்கிரஸ், தி.முக போன்ற பல கட்சிகள் நேற்று முழு அடைப்புப் போராட்டத்தைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தியது.

இதனால் நேற்று முன் தினம் இரவு முதல் பல இடங்களில் பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இரவு பஸ் போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. அனைத்து பஸ்களும் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டன. மீண்டும் நேற்று காலை பஸ் போக்குவரத்து தொடங்கியது. நாகர்கோவில் செட்டிகுளம் உள்ளிட்ட ஆறு இடங்கில் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும்  நான்கு கேரள பஸ்கள் உள்பட 40 பஸ்கள் உடைக்கப்பட்டன.

 

கன்னியாகுமரிக்கு வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் உடைக்கப்பட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் பரபரப்பாகக் காணப்பட்டது. முக்கிய நகரங்களில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பஸ்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக இன்று காலை வரை 18 புகார்களின் அடைப்படையில் மொத்தம் 27 பஸ்கள் உடைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!