ஆர்.கே.நகரில் ₹20 லட்சம் பறிமுதல்: டிடிவி ஆதரவாளர் கைது | cash recovered at rk nagar

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (17/12/2017)

கடைசி தொடர்பு:12:56 (17/12/2017)

ஆர்.கே.நகரில் ₹20 லட்சம் பறிமுதல்: டிடிவி ஆதரவாளர் கைது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக தினகரன் ஆதரவாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் பறிமுதல்

சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதியில் இன்று காலை டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் வருகைக்காக பெண்கள் வீதிகளில் கோலமிட்டு அதன் மீது அத்தப்பூ வைத்து வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் ஆர்கேநகர் மணலி சாலையில் செல்வி என்ற பெண் வீட்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருப்பதாகப் தேர்தல் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு 20 லட்ச ரூபாய் இரண்டாயிரம் ரூபாய்களாகச் சிக்கின. இதுகுறித்த தகவலை அதிமுகவினர்தான் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர் என்ற தகவலால் டிடிவி ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்துடன் பிடிபட்ட செல்வியிடம் தொடர்ந்து  விசாரணை நடந்து வருகிறது


[X] Close

[X] Close