சுகாதார ஆய்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்!

 

"பூமணக்கும் இடத்தில் சாக்கடை நாற கூடாது. மக்கள் இந்த பூ மார்க்கெட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் வடக்கு, ஏ.வி.பி நகர், ஜவகர் பஜார், பூ மார்க்கெட் பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் வளார்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் பார்வையிட்டு, ஆய்வு மேற்க்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, "கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் வடக்கு, ஏ.வி.பி நகர் பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையேற்று முதல் தெருவில் சாலை அமைக்கவும், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிக்கான மின் இணைப்பில் பழுது ஏற்பட்டதை சரிசெய்ய கேட்டுகொண்டதற்கு இணங்க, பணிகள் மேற்கொள்ளபட உள்ளன. ஏ.வி.பி நகர் இரண்டு
மற்றும் முன்றாவது தெருக்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றப்பட்டு கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருவதுடன், கொசுக்களை அழிக்கும் ரசாயன புகை அடிக்கப்பட்டு வருகிறது.

மேலும்,கரூர் ரயில் நிலையம் அருகே உள்ள பூமாக்கெட் பகுதியில் உள்ள சாலையில் இருபுறமும் உள்ள குப்பைகளை அகற்றப்பட்டுள்ளது. பூமார்க்கெட்டில் கழிவுகளை பேடுவதற்காக தனிகுப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பூவியாபாரிகள் குப்பைகளை, குப்பைதொட்டிகளில் மட்டுமே போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூமணக்கும் இந்த இடத்தில் இனி சாக்கை நாறக்கூடாது. மேலும்,சாலை ஒரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனற்ற வண்டிகள் மற்றும் வாகனங்களை அப்புறபடுத்த அதன் உரிமையாளர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!