வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (18/12/2017)

கடைசி தொடர்பு:19:30 (18/12/2017)

கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரி காத்திருப்புப் போராட்டம்! போலீஸாரிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதம்

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சியில் விவசாயச் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
கடந்த 2016-ம் ஆண்டு  தமிழக அரசு அறிவித்த சிறு-குறு விவசாயிகள் கடன் தள்ளுபடியில், திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் கவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அதில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 751 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து புதிய பயிர் கடன் வழங்கி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டிசம்பர் 18-ம் தேதி முதல் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது. அதையடுத்து இது குறித்து உடனடியாக 16-ம் தேதி மாலை திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சு வார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், கே.கே.நகர் காவல் ஆய்வாளர், விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவ.சூரியன், கணேசன். பழனிசாமி, சிவா மற்றும் சங்கத் தலைவர் வெங்கிடுசாமி முன்னாள் தலைவா் சின்னசாமி, சண்முகம், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
திருச்சியில் விவசாய சங்கத்தினர்
அந்தக் கூட்டத்தில்  டிசம்பர் 2-ம் தேதி மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர்  தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் நடைமுறை படுத்தாததைச் சுட்டி காட்டியும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் மண்டல இணை பதிவாளா் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் விவசாயிகளும் அமைதிப் பேச்சு வாா்த்தைக் கூட்டத்திலிருந்து வெளியேறினா். 
 
ஆனால், பேச்சுவார்த்தைத் தொடர்பாக இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காததால், ஏற்கெனவே அறிவித்தபடி18-ம் தேதியான இன்று காலை காஜாமலையில் உள்ள திருச்சி மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அதுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவசூரியன் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்குப் போலீஸார் அனுமதி மறுக்கவே விவசாயச் சங்க நிர்வாகிகளுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க