மக்களை அலர்ட் செய்யும் டி.எஸ்.பி-யின் 8 யோசனை!

பெரம்பலூரில் தொடர் கொள்ளை, கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அதைத் தடுக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாகப் பதிவு பெறாத மாதச் சீட்டு பிடிக்கும் நபர்களிடம் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மங்களமேடு டி.எஸ்.பி ஜவஹர் லால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களில், "உங்கள் வீட்டின் அருகே அல்லது தெருவில் சந்தேகப்படும் படியான ஆட்கள் அல்லது பொருள்கள் மற்றும் வாகனங்களைக் கண்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவும். வீட்டைப்பூட்டிவிட்டு வெளியூர்களுக்குச் செல்லும்போது, தகுந்த நம்பிக்கையான நபரைக் காவலுக்கு வைக்கவும் அல்லது காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கவும். அறிமுகம் இல்லாதவரை வீட்டில் அனுமதிக்காதீர்கள். 2 சக்கரவாகனங்களை, இரவில் வீட்டினுள்ளே நிறுத்தி வாகனத்தைப் பூட்ட வேண்டும். கார்களுக்குத் தொட்டால் ஒலி எழுப்பும் ஒலிப்பான் பொருத்துவதால் வாகனத்திருட்டு, கார் டேப் ரெக்கார்டர் திருட்டைத் தடுக்கலாம்.

ஆண்கள் துணையின்றி, பெண்கள் வெளியில் செல்லும்போது நிறைய நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களின் பணபரிமாற்றங்கள், நகைகள், கையிருப்புத் தகவல்களைப் பொது இடங்களில் செல்போன்களில் பேசாதீர்கள். பதிவு பெறாத மாதச் சீட்டு பிடிக்கும் நபர்களிடம் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். போலியான ஏஜென்டுகளிடம் வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இது குறித்து புகார்களுக்கு மங்களமேடு டி.எஸ்.பி-க்கு 94422 80672, மங்களமேடு இன்ஸ்பெக்டருக்கு 94941 58844, சப்- இன்ஸ்பெக்டருக்கு 94981 59292, காவல் நிலையத்துக்கு 94981 00696 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு மங்களமேடு போலீஸ் சரக எல்லைக்குட்பட்ட கிராமப் பொது மக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!