அரசு பட்டா வழங்கியும் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீராத பிரச்னை! மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிலிருந்து வீடு இல்லாத 54 ஆதிதிராவிட மக்களுக்கு ஆட்டுக்குளம் என்ற கிராமத்தில் வீடு கட்டுவதற்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை அரசு கடந்த 2001-ம் ஆண்டு வழங்கியது.

counciler

அரசு கொடுத்த அந்த இலவச இடத்தில் பயனாளிகளை வீடு கட்டவிடாமல் ஆறுமுகம் என்பவரும் அவரைச் சேர்ந்தவர்களும் சிலரின் தூண்டுதலின் காரணமாகத் தொடர்ந்து இடையூறாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவே இந்தப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்குமாறு, நாவினிப்பட்டி கவுன்சிலர் நாகஜோதி பாண்டி மற்றும் ஊர்ப்பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "ஆட்டுக்குளம் ஆதிதிராவிடர் மக்களுக்கு சுமார் 9 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியுள்ளது. அந்த இலவச நிலத்தைப் பயன்படுத்த விடாமல் சிலர் தடுக்கின்றனர். எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் நாங்கள் வீடு கட்டிக் குடியேற முயன்றும் வெளியூர்க்காரர்களைக் குடியேற விடமாட்டோம் என அந்தப் பகுதியினர் வீண் பிரச்னை செய்து வருகின்றனர். சுமார் 15 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இந்தப் பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!