பா.ஜ.கவுக்குள் கோஷ்டிச் சண்டை..! புலம்பும் நிர்வாகிகள்

தமிழக பிஜேபிக்குள் கோஷ்டிப்பூசல் உச்சத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக எச்.ராஜாவின் ஆதரவாளர்கள் கட்சிப் பொறுப்புகளிலிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 
தமிழக பி.ஜே.பி.யில் பொன்னார் கோஷ்டி, இல.கணேசன், தமிழிசை, எச்.ராஜா என பல கோஷ்டிகள் உள்ளது. இதில் எச்.ராஜா கோஷ்டி தனித்து தெரியும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை ராஜா கோஷ்டிக்கும், பொன்னார் கோஷ்டிக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து கட்சியின் அகில இந்திய தலைமை வரைக்கும் பஞ்சாயத்து போனது. ஆனாலும், எச்.ராஜா ஆதரவாளர்கள் பலர், முன்னாள் நிர்வாகிகளாக்கப்பட்டனர். கேசவவிநாயகம் அமைப்பு பொதுச்செயலளாராக வந்த பின்பு கடந்த ஒரு வருடமாக எந்த சலசலப்புமில்லாமல் சென்று கொண்டிருந்தது.

எச்.ராஜா ஆதரவாளர்கள்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி.நிர்வாகிகள், ''மதுரை மாவட்டத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த கராத்தே ராஜாவை நீக்கியுள்ளனர். கட்சியில் சேர்ந்தது முதல் கடுமையாக உழைக்க கூடியவர். தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது மரியாதை கொண்டவர். இவரைப் போன்ற நிர்வாகிகாளால் தலித் மக்கள் கட்சிக்கு நெருங்கி வந்தார்கள். இவரை நீக்க எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை. இதேபோல் இதற்கு முன் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அணிச் செயலளார் டாக்டர் கயிலைராஜன், ஹரிராஜ் போன்றவர்களை எந்தவித காரணமின்றி நீக்கினார்கள். தலித் சமூக நிர்வாகிகளை திட்டமிட்டு நீக்குவது ஓரங்கட்டுவது நீண்ட காலமாக தொடர்கிறது. இப்படி இருந்தால் தலித் மக்கள் ஆதரவைப் பெற முடியாது. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகத்திடம் எடுத்து சொல்லியும் இதுவரை நடவடிக்கை இல்லை. கட்சியில் எச்.ராஜாவுக்கு ஆதரவாக இருப்பவர்களின் பொறுப்புகளை மட்டும் காலி செய்கிறார்கள். இப்படியே போனால் தமிழகத்தில் பி.ஜே.பி. வளரவே முடியாது'  என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!