தடம் புரண்டு சாலையில் விழுந்த ரயில்... 6 பேர் பலி!

ரயில் தடம் புரண்டது - அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், ரயில் தடம்புரண்டு சாலையில் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சியாட்டிலிலிருந்து போர்ட்லேண்டுக்கு 78 பயணிகள் மற்றும் 5 ரயில் குழுவோடு தன் முதல் பயணத்தைத் தொடங்கிய இந்தப் புது ரயில், தன் முதல் ஓட்டத்திலேயே பெரும் விபத்தைச் சந்தித்துள்ளது. பாலத்தின் மேல் ஓடிய ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு, நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த யாரும் இறக்கவில்லை என்றாலும், ரயிலில் இருந்த பயணிகளில் 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து, அமெரிக்க நேரப்படி காலை 7.40 மணியளவில் நடந்துள்ளது. விபத்து நடக்கும் சமயத்தில், ரயில் 130 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த அதிவேக ரயில் சேவை சமீபத்தில்தான் அங்கு தொடங்கப்பட்டது. 

நெடுஞ்சாலையை ஒட்டி இந்த அதிவேக ரயில் ஓடுவது ஆபத்தானது என அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும், இந்த மாத தொடக்கத்திலேயே கருத்து தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!