ஒகி பாதிப்புகளைப் பார்வையிடப்போகும் மோடி! - கன்னியாகுமரிக்கு விரைந்த முதல்வர், ஆளுநர்

ஒகி புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட, மங்களூருவிலிருந்து லட்சத்தீவு புறப்பட்டார் பிரதமர் மோடி. 

modi


கடந்த நவம்பர் மாத இறுதியில், ஒகி புயல் கன்னியாகுமரி, கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளைப் புரட்டிப்போட்டது. புயலின்போது மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. ஒகி புயல் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் கேரளா மற்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம், லட்சத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளில் ஒகி புயல் பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார். தற்போது, லட்சத்தீவுப் பகுதியைப் பார்வையிடச் சென்றுள்ள மோடி, இன்று மதியம் 2.30 மணியளவில் கன்னியாகுமரி வருகிறார். மோடியை வரவேற்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காலையில் கன்னியாகுமரி வர இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!