'எந்தப் படையும் வரவில்லை'- 18 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர்

கன்னியாகுமரியில், ஒகி புயலின்போது கடலில் மாயமான 10 மீனவர்களை சக மீனவர்களே மீட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

thoothur

Representational Image
 

18 நாள்களுக்குப் பின்னர் கரைக்குத் திரும்பிய 10 மீனவர்களும் ஒகி புயல் வருவதற்கு இரண்டு தினங்களுக்கு முன், ஒரே படகில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். 112 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, ஒகி புயல் தீவிரமாக வீசியுள்ளது. அப்போது, அவர்கள் சென்ற படகு நிலைகுலைந்து முழுவதுமாக சேதமடைந்தது. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இவர்களை,  இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீட்டுள்ளனர். ’விமானப்படையோ, கப்பல்படையோ தங்கள் பகுதிக்கு வரவில்லை’ என மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்கக் கூறினர். கரைதிரும்பும் மீனவர்களுக்கு அக்கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுசெய்துள்ளனர்.

இதேபோன்று ஒகி புயலில் மாயமான கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த 30 மீனவர்கள் இன்று வீடுதிரும்பியதாக தகவல் கிடைத்துள்ளது.  3 படகுகளில் சென்ற அவர்கள் தற்போது ரூ.9 லட்சம் மதிப்புள்ள மீனுடன் கரைத்திரும்பியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படகு கவிழாமல் இருக்க தார்ப்பாலின் பாராசூட் மூலம் தற்காத்துக் கொண்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!