குமரி மீனவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்துக்குப் பிரதமர் வருகை தந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஒகி புயல் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பிரதமர் மோடி குமரிக்கு வருகை தந்தார். 2.15 மணிக்கு வருகை தந்த அவர், கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், குமரி மாவட்டத்தில் காணாமல்போன மீனவர்களின் குடும்பத்தினர், மீனவ பிரதிநிதிகள், பங்குத்தந்தையர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட மீனவப் பிரதிநிதிகளிம் பேசினார். காணாமல்போன மீனவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஒகி புயலால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் தரப்பில் 30 பேரைச் சந்தித்த அவர், பாதிப்பு குறித்துக் கேட்டறிந்தார். முன்னதாகப் புயல் பாதிப்பு குறித்து படக்காட்சிகள் மூலமாகப் பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆளுநர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். பிரதமரின் வருகையைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!