`தினகரன் விசாரிக்கக் கோரும் சாட்சிகள் உயிருடன் இல்லை' - உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பகீர் பதில்

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் விசாரிக்கக் கோரும் சாட்சிகளில் சிலர் உயிருடன் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

1995,1996-ம் ஆண்டுகளில், டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில், வெளிநாட்டிலிருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவுசெய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.

இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி, டி.டி.வி.தினகரன் தாக்கல்செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அலாக்கத்துறை சாட்சிகள் உட்பட 17 பேரை விசாரிக்கக் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்நியச் செலாவணி வழக்கை தினகரன் இழுத்தடிக்க நினைக்கிறார். தினகரன் விசாரிக்கக் கோரும் சாட்சிகளில் சிலர் உயிருடன் இல்லை. தனது தரப்பு சாட்சிகளை விசாரிக்கச் சொல்வதன் மூலம் வழக்கை இழுத்தடிக்க தினகரன் நினைக்கிறார் எனக் குற்றம்சாட்டினார். 

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!