லாங் ஷ்ரக் முதல் கலம்காரி வரை... பெண்களுக்கான டாப் 10 ஃபேஷன் கலெக்ஷன்!

அரசியல் குழப்பங்கள், போராட்டம், ஏமாற்றம், புதிய படைப்பாளிகளின் அறிமுகம், வித்தியாச திரைப்படங்கள் என இந்த ஆண்டில் நாம் கடந்துவந்த நிகழ்வுகள் ஏராளம். அந்த வரிசையில் 2017-ல் பெண்களின் மனதைக் கவர்ந்த சில சூப்பர் ஃபேஷன் காஸ்ட்யூம்களின் அணிவகுப்பு இதோ.

2017 ஃபேஷன்

 

கலம்காரி:

ஆடை

என்னடா பேரு இப்படி இருக்கேனு யோசிக்கிறீங்களா? ஆனா, இதுதான் இப்போ பலரோட சாய்ஸ். சிம்பிளா சொல்லணும்னா ‘யாஞ்சி யாஞ்சி’ பாட்டுல ஷ்ரதா ஸ்ரீநாத் போட்டிருக்கும் புடைவையில் உள்ள டிசைனுக்குப் பேருதான் ‘கலம்காரி’. டாப் ட்ரெண்டுல போய்ட்டு இருக்கிற இந்தக் கலம்காரி, பிளாக் பிரின்ட் (Block Print) மற்றும் கைகளால் பெயின்ட் செய்யப்படும் டிசைன் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நம் நாட்டின் பாரம்பர்ய டிசைன்களில் ஒன்றான இது, புடைவை, சுடிதார் உள்ளிட்ட காஸ்ட்யூம் முதல் வீட்டில் மாட்டப்படும் விண்டோ ஸ்க்ரீன் வரை அனைத்திலும் பிரின்ட் செய்யப்பட்டு ட்ரெண்ட் செட் செய்துள்ளது. பண்டையகால வடிவமைப்புகளைக் கொண்டு அச்சிடப்படுவதால், இதை அனைவரும் விரும்பி வாங்குகிறார்கள். வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விலை!

கலம்காரி ஃபேஷன்


லாங் ஷ்ரக்:

இப்போதெல்லாம் கோட், ப்ளேசர் போன்ற ஆண்களுக்கென வடிவமைக்கப்பட்ட உடைகளை அதிகம் விரும்பி வாங்குவது பெண்கள்தான். விதவிதமான டிசைன், பேட்டர்ன், நிறம் எனப் பெண்களுக்குத்தான் ஏராளமான ஆப்ஷன். ஷர்ட், டீ-ஷர்ட், குர்த்தா என எந்த உடை அணிந்தாலும், மேலே ஒரு  லாங் ஷ்ரக் உடுத்தினால் அதோட லுக் டாப் க்ளாஸ்.

Long Shrug

பிளைன் உடையாக இருந்தாலும், இக்கட், கலம்காரி போன்ற பேட்டர்னிலான ஷ்ரகை போட்டால் முற்றிலும் வேறு தோற்றம் கிடைக்கும். மலிவான விலையில் கடைகளில் கிடைக்கும் இந்த ஷ்ரக் 2017-ஆம் ஆண்டின் கல்லூரிப் பெண்களின் பெஸ்ட் சாய்ஸ். எல்லாரோட ஃபேவரைட் சமந்தா கூட ‘நீ தானே’ பாடலில் இந்த லாங் ஷ்ரக் அணிந்திருப்பார்.

Samantha with Long Shrug


லாங் ட்யூநிக் (Long Tunic):

லாங் ட்யூநிக் கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ‘டோரா’ படம் முழுக்க நயன்தாரா இந்த உடையில்தான் இருப்பார். பார்ப்பதற்கு குர்த்தா போல இருக்கும். ஆனால் இதை ஸ்பகெட்டி (Spaghetti) அல்லது பிளைன் டீ-ஷர்டுடன் இணைந்து போட வேண்டும். எந்தவிதமான கூடுதல் வேலைப்பாடின்றி எளிமையாக வடிவமைத்த இந்த உடை அனைவருக்கும் பொருந்தும். இதற்கு மேட்சாக லெக்கிங்ஸ் அல்லது ஜீன்ஸ் உடுத்தலாம். ரோல் அப் (Roll Up) ஸ்லீவ் மற்றும் பேன்ட் காலர் (Band Collar) ட்யூநிக் ஆடைகளின் ஹைலைட். இதன் விலையும் மிகக் குறைவு.

Nayanthara Tunics

கிராப் டாப் :

கல்லூரிப் பெண்களின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட் ‘கிராப் டாப்’. சாதாரண டாப்களின் நீளத்தை குறைத்து உடுத்தினால் அது கிராப் டாப். வெஸ்டர்ன், இண்டோ-வெஸ்டர்ன் உடைகள் இரண்டிலும் பல டிசைன்களில் வெளிவந்த கிராப் டாப், இந்த ஆண்டில் அதிகம் விற்பனையான உடை. இதற்கு மேட்சாக ஸ்கர்ட், பலாசோ பேன்ட், ஜீன்ஸ்  உடுத்தலாம். ஒல்லிபெல்லி இடையழகிகளுக்கு இந்த உடை பக்கா ட்ரெண்ட். வெஸ்டர்ன் தோற்றத்துக்கு இதனுடன் பிரேஸ்லெட், டேங்க்லர்ஸ், ஹய் ஹீல்ஸ் போன்றவற்றைப் போட்டுக்கொள்ளலாம்.

ஃபேஷன்

இண்டோ-வெஸ்டர்ன் உடையாக இருந்தால், ஜிமிக்கி, வளையல், மொஜிரீஸ் போன்றவற்றை உபயோகப்படுத்தலாம். மிகக் குறைந்த விலையில் பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் இந்த கிராப் டாப்பை காஜல் அகர்வால் மெர்சல் திரைப்படத்தில் வரும் 'மாச்சோ' பாடலில் உடுத்திருப்பார்.

  Crop Top


ஜம்ப்சூட்:

ஜம்ப்சூட் என்பது முதலில் பாராஷூட்டர்களால் உபயோகிக்கப்பட்ட உடை. பிறகு விண்வெளி வீரர்கள், விமானிகள் என மிக உயரத்தில் பயணம் செய்கிறவர்களுக்குக் கவச உடையாக பயன்பட்டது. நாளடைவில் அனைவரும் உடுத்தும் உடையாகவும், பல புதுமைகளைப் புகுத்தி முற்றிலும் ஃபேஷன் உடையாகவும் மாறிவிட்டது. இடுப்பின் மேல் (ப்ளவுஸ்) மற்றும் கீழ் (பேன்ட்) ஆடையின் பகுதிகளை இணைத்து, கழுத்திலிருந்து கால் வரை ஒரே உடையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் உடைதான் ஜம்ப்சூட். சிம்பிள் டிசைன் முதல் அதிக வேலைப்பாடுகள் கொண்ட டிசைன் வரை, எல்லா நிறங்களிலும் மார்க்கெட்டில் கிடைக்கும் இந்த ஜம்ப்சூட்டின் விலையும் அதிகமில்லை. அதிலும் இப்பொழுது பெல்ட், குறுக்கிய கழுத்து பேட்டர்ன், ஸ்லீவ்லெஸ் எனப் பல வெரைட்டி உள்ளன.

ஆடை


சாலிட் புடவை :

இக்கட், கலம்காரி என நம் நாட்டுப் பாரம்பர்ய டிசைன்களில் உருவாகும் உடைகள் ஒரு பக்கம் விற்பனையில் களைகட்டியிருக்க, மறுபக்கம் சாலிட் உடைகளும் ட்ரெண்டாகி வருகிறது. பூக்கள் அச்சிட்ட உடைகள் சென்ற வருட ட்ரெண்ட். இந்த ஆண்டு பிளைன் அல்லது சாலிட் உடைகள்தாம் ஃபேஷன். பிளைன் புடவை, அதற்கு மேட்சாக அதிக வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ். அதை மெருகேற்ற ஜிமிக்கி, வளையல், சோக்கர் என சிம்பிளாகத் தோன்றினாலும், இதுதான் 2017-ம் ஆண்டின் கிளாசிக் அப்டேட். 'காதலாட' காஜல் அகர்வால், 'நல்லை அல்லை' அதித்தி ராவ், 'நில்லாயோ' கீர்த்தி சுரேஷ் பாடல் காட்சிகளில் சாலிட் புடைவையில் அழகோவியம் போல் தோன்றிருப்பார்கள். பிளைன், பேட்டர்ன் எதுவாக இருந்தாலும், புடவைக்கு என்னிக்குமே மார்க்கெட் போகாதுனு சொல்றது சரிதானே.

ஃபேஷன்

பேஸ்டல்ஸ்:

ட்ரெண்ட் என்றால் காஸ்ட்யூம் மட்டுமல்ல நிறங்களும் அதில் அடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் ட்ரெண்டி நிறம் 'பேஸ்டல்ஸ்'. அடர்த்தியான நிறத்தில் வெண்மை தன்மையை அதிகரிப்பதால் உருவாகும் நிறம் பேஸ்டல். சமந்தா திருமணம் முதல் ‘விருஷ்கா’ திருமணம் வரை, அனைவரது உடைகளும் பேஸ்டல் நிறத்தில் உருவானவைதான். பிங்க், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் முதலிய நிறங்களின் பேஸ்டல் ஷேட்ஸ் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அதிலும் இண்டோ-வெஸ்டர்ன் மற்றும் இந்திய உடைகள் இந்த நிறங்களுக்குத் தனி அழகு சேர்க்கும். உடைகளுக்கு மேட்சாக பேஸ்டல் கலர் கற்கள் பதித்த ஆபரணங்களும் அவ்வளவு அழகு. பேஸ்டல் நிறங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் மட்டுமல்ல, என்னிக்குமே சூப்பர் ஆப்ஷன்.

ஆடை

கோல்ட்-ஷோல்டர் ஸ்லீவ்:

இந்த ஆண்டு இறுதியில், முக்கியமா தீபாவளி ஷாப்பிங் நேரங்களில், நம் அனைவரது கண்களிலும் அதிகம் காணப்பட்டது கண்டிப்பா கோல்ட்-ஷோல்டர் வகை ஆடைகளாகத்தான் இருக்கும். ஸ்லீவ்லெசும் (Sleeveless) இல்ல, ஃபுல் ஸ்லீவும் இல்ல, என்ன வகை டிரஸ் இதுனு எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கும். அவை கோல்ட்-ஷோல்டர் உடைகள்தான். முழு நீளச் சட்டைகளில் தோள்பட்டைப் (Shoulder) பகுதியில் சிறு பிளவை ஏற்படுத்துவதுதான் இந்த கோல்ட்-ஷோல்டர் ஸ்லீவ். ஃபுல் டிரஸ், டீ-ஷர்ட், ஷர்ட், டாப், குர்த்தா என எல்லா வகை உடைகளிலும் இந்த கோல்ட்-ஷோல்டர் ஸ்லீவை பொருத்தி பெரிய ட்ரெண்ட் செட் செய்தது 2017.

ஆடை

கேப்ஸ் அண்ட் போன்ச்சோஸ் (Capes and Ponchos):

போன்ச்சோ என்பது முன்றைய காலத்தில் ப்ளாங்கெட்டாக (Blanket) பயன்படுத்திய ஒன்று. சில நேரங்களில் மழையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் பயன்பட்டது. ஆனால், தற்போது அதுவே ஃபேஷன் ஆகிவிட்டது. லெஹெங்கா, கவுன், டாப் போன்றவைகளில் ஸ்லீவ்களுக்குப் பதிலாக, எம்ப்ராய்டரி போன்ற கூடுதல் வேலைப்பாடுகள் நிறைந்த தனிப்பகுதியை, தோள்பட்டை முதல் இடை வரை நீண்டு அமைக்கப்படும் உடைதான் யுவதிகள் இன்று அணியும் போன்ச்சோ. இது தற்போது சல்வார்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. டீனேஜ் பெண்களுக்குக் கண்டிப்பா இந்த மாடல் ஃபேவரைட்.

ஆடை

ஃப்ரன்ட் ஸ்லிட் (Front Slit):

முன்பெல்லாம் சல்வார் கமீஸ்களில் இருபக்க முடிவில்தான் ஸ்லிட் எனப்படும் சைட் ஓபன் (Side Open) இருக்கும். ஆனா, இப்போதைய ட்ரெண்ட் ஃபிரன்ட் அல்லது சென்டர் ஸ்லிட். வெஸ்டர்ன் உடைகள், இந்திய எத்னிக் உடைகள் இரண்டிலும் சென்டர் ஸ்லிட் பொருத்தி வடிவமைப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். கல்லூரி/அலுவலகம் செல்லும் பெண்கள் முதல் திருமணத்துக்குத் தயாராகும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த வகையான ஆடைகள் கிளாஸிக் டச் கொடுக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!