வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/12/2017)

கடைசி தொடர்பு:23:00 (19/12/2017)

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய கரூர் ராணுவ வீரர் உடல் ஏழு நாள்களுக்குப் பின் மீட்பு!

 

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூரைச் சேர்ந்த மூர்த்தி என்ற ராணுவ வீரர், கடந்த 12-ம் தேதி பனிச்சரிவில் சிக்கினார். அவரது உடல் 7 நாள்கள் கழித்து இன்று மீட்கப்பட்டது.

கரூர் மாவட்டம்,குளித்தலையை அடுத்த நாதிப்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தார். இருக்குத் தமிழரசி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழநதைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த பன்னிரண்டாம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மூர்த்தி உள்பட 5 வீரர்கள், பனிச்சரிவில் சிக்கினர். அவர்களைத் தேடும் பணியை ராணுவ உயரதிகாரிகள் முடுக்கிவிட்டனர். இதற்கிடையில், இதுகுறித்த தகவலறிந்த அவரது மனைவி கரூர் மாவட்ட கலெக்டர் காேவிந்தராஜிடம், 'என் கணவர் பனிச்சரிவில் மாட்டிக்கிட்டதா சாென்னாங்க. அவருக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. அதனால், அவரது நிலை என்ன என்பதைக் கண்டறிந்து, அவரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் ஆவன செய்யணும்' என்று கண்ணீர் காேரிக்கை வைத்தார். இந்நிலையில், தீவிர தேடுதல் பணியில் இறங்கியிருந்த ராணுவத்தினர், பனிச்சரிவில் சிக்கியிருந்த மூர்த்தியின் உடலை இன்று மீட்டனர். இதுகுறித்த தகவலை மூர்த்தியின் குடும்பத்தாருக்கு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது உடல், ராணுவ மரியாதையாேடு கரூருக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.