கிருஷ்ணகிரி அணைக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு பட்டா வேண்டி தீர்மானம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் ஊராட்சியில் கடந்த 1952-ம் ஆண்டில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட அங்கு வசித்துவந்த மக்கள் வெளியேற்றி அவர்களுக்கு கிருஷ்ணகிரியில் பல்வேறு பகுதிகளில் வனத்தை ஒட்டிய நிலங்ளை அளித்துள்ளனர். 

கிருஷ்ணகிரி அணைக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் சிறப்பு தீர்மானம்

இதில் சோக்காடி ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில் வழங்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு இன்று வரை வீட்டு மற்றும் நிலங்களுக்கான பட்டா வழங்கப்படவில்லை. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் கிராம மக்கள் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். சோக்காடி ஊராட்சி காட்டுப்பெருமாள் கோயிலில் வனக்குழு சிறப்பு கிராம சபை கூட்டம், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சிமன்ற தனி அலுவலருமான ராஜா தலைமையில் சிறப்புக் கூட்டம் நடத்தி கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை கிருஷ்ணகிரி அணை கட்டியபோது நிலம் கொடுத்த மக்களுக்குப் பட்டா வழங்கச் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

தீர்மானத்தில் மேல்கொட்டாய், கட்டுகான்பள்ளம், கெடிவெங்கட்ராமன் கோயில், கெட்டேரி, ஜம்பூத்து, சோக்காடி, ஆலமரத்துக்கொட்டாய், காட்டுப்பெருமாள் கோயில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவும், அவர்கள் விவசாயம் செய்து வரும் நிலத்துக்குப் பட்டா வழங்க வேண்டும் என்றும், இப்பகுதியில் தற்போது185 குடும்பத்தினர் வசித்துவருகின்றன. இவர்கள் இன்று வரை மண்சாலையில் சென்று வருகின்றனர். தார் சாலை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி பெற்றுதரவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!