‘ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து என்ற வதந்திகளை நம்பாதீர்கள்’- ராஜேஷ் லக்கானி விளக்கம் | R.K.Nagar election will not be cancelled says Rajesh lakhoni

வெளியிடப்பட்ட நேரம்: 01:21 (20/12/2017)

கடைசி தொடர்பு:08:01 (20/12/2017)

‘ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து என்ற வதந்திகளை நம்பாதீர்கள்’- ராஜேஷ் லக்கானி விளக்கம்

ஆர்.கே. நகர் , r.k.nagar

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகிறது எனப் பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

பெரும் பரபரப்புக்கு மத்தியில், வரும் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல். அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பி.ஜே.பி சார்பில் கரு.நாகராஜன், குக்கர் சின்னத்தில் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம்  மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள். 19-ம் தேதி மாலை 5 மணியோடு பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தொகுதி முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் அளவில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக தி.மு.க புகார் அளித்திருந்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என பல்வேறு வதந்திகள் இன்று உலவ ஆரம்பித்தன. இதுகுறித்து விளக்கமளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ‘ஆர்.கே.நகர் தேர்தல்குறித்து வேண்டாத வதந்திகள் பரப்பப்படுகின்றன. தேர்தல் ரத்தாகும் என்ற வதந்திகளை நம்பாதீர்கள்’, என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.