ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ! - தினகரன் தரப்பு வெளியிட்டது

ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டே டி.வி பார்க்கிறார். தற்போது இந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டுவருகின்றன. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணையும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மற்றொருபுறம் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நாளை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேல், ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

jayalalithaa video

தன் மொபைலில் இருந்த வீடியோவை வெளியிட்டப் பின்னர் பேட்டியளித்த வெற்றிவேல், “ஜெயலலிதாவை தினம் தினம் அரசும் ஆள்பவர்களும் கொச்சைப்படுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த பல ஆதாரங்கள் உள்ளன. பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து கூறுகின்றனர். விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக ஏன் அழைப்பு விடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!