வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (20/12/2017)

கடைசி தொடர்பு:10:21 (21/12/2017)

தினகரனைத் திட்டிய ஸ்டேட்டஸை மாற்றிய கிருஷ்ணப்பிரியா! - காட்டிக் கொடுத்த ஃபேஸ்புக்

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ புகைப்படம்

ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் வீடியோவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். 20 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டு தமிழக அரசியல் களத்தையே அதிரவைத்துள்ளார். அரசியல் களத்தில் அனலை வீசும் இந்த வீடியோகுறித்து சர்ச்சைக்குரிய விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும், இதுதொடர்பாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெற்றிவேல்மீது 126 வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். 

கிருஷ்ணப்பிரியா இளவரசியின் மகள்

இந்த நிலையில், அந்த வீடியோ வெளியிடப்பட்டது குறித்து டி.டி.வி.தினகரனுக்குத் தெரியாது என வெற்றிவேல் தெரிவித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல் எழுந்துள்ளன. அதில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வெற்றிவேல் வீடியோ வெளியிட்டதற்குத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். 'டி.டி.வி.தினகரனுடன் இருக்கும் வெற்றிவேலின் செயல் கீழ்த்தரமானது' எனக் கூறியுள்ளார்.  

இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் கிருஷ்ணப்பிரியா தன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் முதலில் “T.T.V-யின் கீழ்த்தரமான செயல்” என்று தான் டைப் செய்துள்ளார். பின்புதான் ‘T.T.V ஆதரவாளர் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்” என்று ஸ்டேட்டஸை எடிட் செய்துள்ளார். இதைப் ஃபேஸ்புக்கில் இருக்கும் 'Edit History" அம்சம் காட்டிக்கொடுத்துவிட்டது. 

edit history

இதனால் தினகரன் வட்டாரங்கள் கொந்தளிப்பில் உள்ளன. இதையடுத்து கிருஷ்ணப்பிரியா தன் ஃபேஸ்புக் பதிவை அழித்துவிட்டு மீண்டும் புதிதாகப் பதிவு செய்துள்ளார். இதனிடையே ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் கைதாவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெற்றிவேல் வீடியோ வெளியிட்ட விவகாரத்தால் தினகரன் தரப்பில் பலருக்கு அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க