`3 லட்சம் பேரின் வாழ்வாதாரம் போய்விட்டது' - கட்டுமான தொழிலாளர்கள் வேதனை

கட்டுமானத் தொழிலைக் காப்பாற்ற வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்யக் கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கட்டுமான தொழிலாளர்கள்
அந்தச் சங்கத்தின் சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் சம்பத் தலைமையில் நடந்தப் போராட்டத்தில், “திருச்சி மாவட்டத்தில் கட்டடத் தொழிலில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மணல் தட்டுப்பாடு நிலவி வருவதாலும் மணலின் அதிக விலையேற்றத்தாலும் கட்டுமான தொழில்கள் சரியாக நடைபெறவில்லை. இதனால் கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மணல் தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான எம்.சாண்ட் மணலைத் தயாரித்து குறைந்த விலையில் வழங்க வேண்டும். வேலையிழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கட்டுமான பொருளுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!