``வீடியோ வெளியிட்டதில் தவறில்லை”: ஜெயானந்த் பேட்டி

``மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதில் தவறேதும் இல்லை” என ஜெயானந்த் திவாகரன் தற்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார்.

ஜெயானந்த்

ஜெயானந்த் திவாகரன் கூறுகையில், “தொண்டர்களின் நிம்மதிக்காகவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், வீடியோவை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக வெற்றிவேல் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனால் அதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும், இந்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாகச் சசிகலா, தினகரனுக்கு எதுவும் தெரியாது. 

வீடியோ வெளியிடப்பட்டதில் தவறு இருப்பதாக எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், இதில் தவறு ஏதும் இல்லை. அந்த வீடியோ குறித்த உண்மைத்தன்மையை அறிய சர்வதேச அளவில்கூட சோதனை நடத்திக்கொள்ளலாம்” எனக் கூறினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!