'அக்கறை இல்லாத அரசுகள்'- போராட்டத்தில் பொங்கிய பெண்கள்

 

கோரிப்பாளையம் தர்கா செல்லும் வழியில் விமென் இந்தியா மூவ்மென்ட் சார்பில் பெண்கள் போராட்டம் நடத்தினர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பிலிருந்து கேஸ் விலை உயர்வு வரை பல காரணங்களை முன்னிறுத்தி பல பெண்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டம்குறித்து அவர்கள் கூறுகையில், “ரேஷன் பொருள்கள் வழங்குவதில் முறைகேடு, கேஸ் விலை உயர்வு , மானியம் வழங்குவதில் இழுத்தடிப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் நியாய விலைப் பொருள்கள் விலை உயர்வு என மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பல செயல்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறது. எனவே, இந்தப் போராட்டம் பெண்களின் அரசியல் பிரவேசமாகவும், தூய அரசியலின் தொடக்கமாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தனர். இந்தக் கண்டனப் போராட்டத்துக்கு விமென் இந்தியா மூவ்மென்ட் தலைவர் காதிஜா பீவி தலைமை ஏற்றார். மேலும், பிலால்தீன் ஆசியா மர்யம் போன்றோர் போராட்டத்தில் கண்டன உரை ஆற்றினர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!