மதுரையில் அங்கன்வாடி ஊழியர்கள், `அரசுக்கு நினைவூட்டும்' போராட்டம்..! | Anganwadi workers protest against government

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (21/12/2017)

கடைசி தொடர்பு:07:20 (21/12/2017)

மதுரையில் அங்கன்வாடி ஊழியர்கள், `அரசுக்கு நினைவூட்டும்' போராட்டம்..!

Protest

தகுந்த ஊதியம் வழங்க வேண்டும், முறையான பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதையொட்டி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, நூற்றுக்கணக்கான அங்கன்வாடி கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் கிட்டத்தட்ட வாரத்தில் 7 நாள்களுமே பணிபுரிகின்றனர். மேலும், அங்கன்வாடி பணியை தவிர்த்து அரசின் பல்வேறு பணிகளையும் கடந்த 1982-ம் ஆண்டு முதல் செய்துவருகிறார்கள். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், அங்கன்வாடி  பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் என அரசு அறிவித்திருந்தது. தற்போது அதை மறந்தும் விட்டது. இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட  விஷயங்களை அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதற்காக இந்தப் போராட்டம் என மதுரையில் குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இப்போராட்டம் குறித்து , `அங்கன்வாடி ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க வேண்டும், முறையான பென்ஷன் வழங்க வேண்டும், கோடை விடுமுறைகூட எங்களுக்கு இல்லை, எனவே, பறிக்கப்பட்ட விடுமுறைக்கு ஓய்வு நாள்கள் வழங்க வேண்டும். சொன்ன வாக்குறுதிகளைக் கூட செய்யாமல்அரசு அலட்சியமாக இருக்கிறது. எங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர். மேலும், 'போராட்டத்தின் தொடர்ச்சி ஜனவரி 22, 23, 24 தேதிகளில் தரமணி அலுவலகம் முன்பு மாநிலம் தழுவி நடைபெறும்' எனவும் அங்கன்வாடி ஊழியர்கள் அறிவித்தனர்.


[X] Close

[X] Close