93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

இந்தியா, india

ந்தியா - இலங்கைக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில், 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றுள்ளது.

கட்டாக்கில் நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இந்திய அணியின் இன்னிங்ஸை ஆரம்பித்தனர். ரோகித் ஷர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் கூட்டணி பலமான தொடக்கத்தைத் தந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை அணி, தொடக்கம் முதலே சொதப்பியது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 1 ரன், குணரத்னே 4 ரன்கள், ஷனாகா 1 ரன், கேப்டன் பெரேரா 3 ரன்கள், தனஞ்செயா 7 ரன்கள் என ஒற்றை இலக்கங்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியாக, இலங்கை அணி 16 ஓவர்களில் 87 ரன் மட்டுமே எடுத்து படுதொல்வி அடைந்தது. இந்திய அணி சார்பில் யுவேந்திர சாகல் 4 விக்கெட்டுகள், பாண்ட்யா 3 விக்கெட்டுகள், குல்தீப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மூன்று போட்டிகள்கொண்ட இந்தத் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!