'களங்கம் நீங்கிவிட்டது'- மகிழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிவருகின்றனர்.stalin
 

’இனி, தி.மு.க-வுக்கு எல்லாமே வெற்றிதான்’ என்று துரைமுருகன் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார். சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது இல்லத்தில் தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ’எங்களை அவமானப்படுத்தி அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு போடப்பட்ட வழக்குதான் 2ஜி வழக்கு. இந்த வழக்கில் பெரிய அளவில் சித்திரித்து, பொய் கணக்கைக் காட்டித் திரித்தார்கள்.

தற்போது, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க மீதான களங்கம் நீங்கிவிட்டது. இந்த நேரத்தில், ஊடக நண்பர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். 2ஜி வழக்கு போடப்பட்டபோது எப்படி ஆர்வத்தோடு பெரிதுபடுத்தினீர்களோ... அதேபோன்று இப்போது, தி.மு.க மீது குற்றமில்லை என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதைப்பற்றியும் நீங்கள் பெரிதுபடுத்தி, கழகத்தின் மீதுள்ள களங்கத்தைப் போக்க வேண்டும்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!