`பொய்மையின் திரையைச் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த தீர்ப்பு' - கி.வீரமணி

veeramani

'' 2 ஜி வழக்கில் தி.மு.க நெருப்பாற்றில் நீந்தி வெளிவந்துள்ளது. முழு விடுதலை பெற்ற ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார் முதலிய அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார். 

தயாளு அம்மால் கனிமொழி ராசா

2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''2ஜி அலைக்கற்றை வழக்கில், சி.பி.ஐ தனி நீதிமன்றத்தில் தனி நீதிபதி ஷைனி இன்று (21.12.2017) காலை அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு. உண்மைகளை உலகத்தாருக்கு அறிவிக்கும் பொய்மையின் திரையை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த தீர்ப்பு. வரவேற்கிறோம். பாராட்டி மகிழ்கிறோம். யாம் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

காரணம், பெரியார் நுண்ணாடியில் முதலில் பார்த்து, இவ்வுண்மைகளை,  எதிர்நீச்சலாக நாடு முழுவதும் எடுத்துச் சென்று பிரசாரம் செய்தது தாய்க் கழகமாம் தந்தை பெரியார் கண்ட இந்த சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகமே. வாய்மை வென்றிருக்கிறது. தி.மு.க நெருப்பாற்றில் நீந்தி வெளிவந்துள்ள முழு விடுதலை பெற்ற சகோதரர் ஆ.ராசா, கவிஞர் கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார் முதலிய அனைவருக்கும் வாழ்த்துகள். காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ'' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!