128 மாதங்கள்.... ரூ.1.76 லட்சம் கோடி  ஊழல்... 2ஜி அலைக்கற்றை வழக்கின் டைம்லைன்! 

2ஜி

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் வழக்கு என்று கூறப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆ.ராசா அமைச்சர் ஆனது முதல் இன்றுவரை நடந்த இந்த வழக்கின் நிகழ்வுகள் இதோ....

மே 2007:

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானார் ஆ.ராசா

ஆகஸ்ட் 2007:

தொலைத்தொடர்புத் துறை 2ஜி அலைக்கற்றைகளுக்கு அனுமதி வழங்கும் வேலைகள் தொடங்குகின்றன.

அக்டோபர் 2007:

46 நிறுவனங்களிடமிருந்து 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நவம்பரில், பிரதமரிடமிருந்து அமைச்சர் ராஜாவுக்கு முறையான அனுமதி மற்றும் கட்டணம் விதிக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது. அதற்கு அமைச்சரிடமிருந்து முறையான விளக்கம் தரப்படவில்லை.

நவம்பர் 2007:

மத்திய நிதி அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்திடம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த செயல்முறை பற்றி கேள்வி எழுப்புகிறது.

ஜனவரி 10, 2008:

''தொலைத்தொடர்புத் துறை அலைக்கற்றை ஒதுக்கீட்டை செப்டம்பர் 25-க்கு முன் யார் விண்ணப்பித்தார்களோ... அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்'' என்றது. பின்னர், ''மதியம் 3:30 - 4: 30 மணிக்குள் விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படும்'' என்றும் கூறியது.

மே 4, 2009:

தொலைத்தொடர்புத் துறைக்கு எதிராக 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்தியப் புலனாய்வு ஆணையத்திடம் ஊழல் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள், இந்தப் புகாரை சி.பி.ஐ-க்கு மாற்றினர்.

ஜூலை 2009:

டெல்லி உயர் நீதிமன்றம், ''கட்-ஆஃப் கட்டணம் நிர்ணயித்தது சட்டவிரோதமானது'' எனக் கூறியது.

அக்டோபர் 2009:

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சக அதிகாரிகளிடம், சி.பி.ஐ. விசாரணையும், ரெய்டும் நடத்தியது.

நவம்பர் 16, 2009:

நீரா ராடியாவின் டேப் ஆதாரங்கள் வெளியாயின. அதில், அவர் இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இதில் நீரா ராடியா, அமைச்சர் ஆ.ராசாவுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாயின.

மார்ச் 31, 2010:

மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் அனுமதி வழங்குவதில் முறைகேடும், வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று கூறப்பட்டது.

மே 6, 2010:

நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்கள் பொதுவெளியில் வெளியாயின.

2ஜி

ஆகஸ்ட் 18, 2010:

பி.ஜே.பி. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அமைச்சர் ராஜா மீது 2ஜி ஊழல் தொடர்பான வழக்கைத் தாக்கல் செய்கிறார். இதுதொடர்பாக 10 நாள்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்டம்பர் 27, 2010:

வெளிநாட்டு நிறுவனங்கள், அலைக்கற்றை விவகாரத்தில் விதிகளை மீறியுள்ளன என்று தகவல்கள் வெளியாகின.

நவம்பர் 10, 2010:

மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

நவம்பர் 15, 2010:

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஆ.ராசா.

பிப்ரவரி 10, 2011:

ஆ.ராசாவிடம், சி.பி.ஐ. நான்கு நாள்கள்  விசாரணை நடத்தியது.

பிப்ரவரி 17, 2011:

ஆ.ராசா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மார்ச் 29, 2011:

உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது. 

ஏப்ரல் 25, 2011:

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் 4 பேர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது  சி.பி.ஐ.

நவம்பர் 28,2011

கனிமொழி உள்ளிட்ட நான்கு பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பெயில் வழங்கியது.

பிப்ரவரி 2, 2012:

அனுமதி வழங்கப்பட்ட 122 நிறுவனங்களின் லைசென்ஸை ரத்து செய்தது, உச்ச நீதிமன்றம். 

ஏப்ரல் 25, 2014:

2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஜூன் 1, 2015:

2ஜி ஊழல்மூலம், 'கலைஞர்' டி.வி. 200 கோடி ரூபாய் பெற்றதாகப் புகார் எழுந்தது.

ஆகஸ்ட் 19, 2015:

ஆ.ராசா மீது, சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் 19,  2017:

சிறப்பு நீதிமன்றம் வாதங்களை முடித்தது.

டிசம்பர் 21, 2017:

2ஜி வழக்கின் தீர்ப்பு - வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!