வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (21/12/2017)

கடைசி தொடர்பு:19:40 (21/12/2017)

போலீஸின் வாகனச் சோதனைக்குப் பயந்து உயிரைப் பறிகொடுத்த வாலிபர்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரைப் பார்த்து பயந்து மினிலாரியிலிருந்து கீழே குதித்த இரண்டு பேரில் ஒருவர் லாரி டயரில் சிக்கிப் பலியனார். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

one man was death by the fear for the police by jumping

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளத்தைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் மற்றும் பாண்டி. இவர்கள் இருவரும் விவசாயிகள். பயிர்களுக்கு உரம் வாங்குவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான மினிலாரியில் ஏறி, இருவரும் பேய்க்குளம் சென்றுகொண்டிருந்தனர். அதே மினிலாரியில் மேலும் 2 பேர் ஏறி பயணம் செய்தனர். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாகப் போலீஸார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த மினிலாரி ஏற்கெனவே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மினிலாரியின் டிரைவர் சேர்மராஜ், தப்பிச் செல்லும் நோக்கில் ஆட்டோவை பின்னோக்கி ஓட்டினார்.

போலீஸாரைக் கண்டதும் மினிலாரியைப் பின்னோக்கி அவசரமாக டிரைவர் ஓட்டுவதைக் கண்ட ஐயப்பன், பாண்டி இருவரும் தாங்கள் மணல் கடத்தல் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருப்பதை அறிந்து டிரைவருடன் சேர்ந்து நாமும் போலீஸில் சிக்கிக்கொள்வோம் என பயந்த இருவரும் மினிலாரியில் இருந்து தப்பித்து ஓடுவதற்காகக் குதித்தனர். கீழே குதித்ததில் லாரி டயரில் சிக்கிய ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பாண்டி, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

police protection

இதற்கிடையில் பலியான இருவரின் உறவினர்கள் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டதால்தான் ஐயப்பன் உயிரிழந்தார். எனவே, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை முன்பு திருச்செந்தூர் - திசையன்விளை சாலையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி டயரில் சிக்கி ஒருவர் இறந்த இந்தச் சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க