ஆறுமுகசாமி புகார் எதிரொலி! - முன்ஜாமீன் கோரினார் வெற்றிவேல்! | vetrivel applied for bail

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (22/12/2017)

கடைசி தொடர்பு:12:18 (22/12/2017)

ஆறுமுகசாமி புகார் எதிரொலி! - முன்ஜாமீன் கோரினார் வெற்றிவேல்!

ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி, வெற்றிவேல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வெற்றிவேல்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பினர் இரண்டு நாள்களுக்கு முன்னர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டே டி.வி பார்க்கிறார். ஜெயலலிதா சிகிச்சைபெற்ற இந்த வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில், வெற்றிவேல் மீது வழக்குப்பதிவுசெய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள உத்தரவில், ”ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது ’126 பி’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்” என்று தேர்தல் அதிகாரி பிரவீண் நாயருக்கு உத்தரவிட்டார். வெற்றிவேல் மீது தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, தற்போது அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர மனுவாக இன்று பிற்பகல் 1 மணி அளவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.


அதிகம் படித்தவை