கிருஷ்ணபிரியா குறித்து கேள்வி! ஜெட் வேகத்தில் சென்ற தினகரன்

மதுரையில் தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் லட்சுமியின் மனைவி மரணமடைந்த துக்க நிகழ்வில் கலந்துகொள்ள இன்று மதியம்  வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் வேகமாகக் கிளம்பிச் சென்றார். விமான நிலையத்தில் அவர் உள்ளே செல்ல, வெளியே ஆதரவாளர்கள் சூழ ஆரவாரமாக வந்தார் டி.டி.வி.தினகரன். நேராக துக்க வீட்டுக்கு வந்தார்.

கருத்து கணிப்பு

அஞ்சலி செலுத்திவிட்டு வந்த டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது,"ஆர்.கே. நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா, அராஜகம் ஆகியவற்றை கடந்து நூறு சதவிதம் வெற்றி பெறுவோம். கருத்துக் கணிப்பை மட்டும் நம்பி நாங்கள் கிடையாது" என்றும் தெரிவித்தவரிடம், ஜெயலலிதா வீடியோ வெளியிட்டதைப் பற்றி கிருஷ்ணபிரியாவின் கருத்து பற்றியும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு அனுப்பியுள்ள சம்மன் பற்றியும் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஜெட் வேகத்தில் திருநெல்வேலிக்குக் கிளம்பிச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!