ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெறுவேன் - தினகரன் நம்பிக்கைப் பேச்சு | I will win in R.K.Nagar byelection - TTV dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (23/12/2017)

கடைசி தொடர்பு:02:45 (23/12/2017)

ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெறுவேன் - தினகரன் நம்பிக்கைப் பேச்சு

"மக்கள் மாற்றத்தை விரும்புவதால் ஆர்.கே.நகரில் நிச்சயமாக அமோக வெற்றி பெறுவேன்" என  அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கோவில்பட்டியில் தெரிவித்துள்ளார். 

TTV dinakaran press meet in kovilpatti

 

ராஜஸ்தான் மாநிலத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டியின் வீட்டில் ஆறுதல் சொல்வதற்காக அவரது சொந்த ஊரான நெல்லை மாவட் மூவிருந்தாளி, சாலைப்புதூருக்குச் செல்லும் வழியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், "ஆர்.கே.நகர்  மக்கள் மாற்றத்தை விரும்பும்புகிறார்கள். அதனால் நிச்சயம் அமோக வெற்றி பெறுவேன். வேட்புமனுத்தாக்கல் செய்தது முதல் பிரசாரம் முடியும் வரை என்னையும் எங்கள் அணித் தொண்டர்களையும் கண்காணிப்பதையே காவல்துறையினரும், உளவுத்துறையினரும் வேலையாகக் கொண்டிருந்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் அம்ருதாதான் என சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அது முற்றிலும் பொய்யானது. ஊடகங்கள்தான் இதனைப் பெரிதுபடுத்தி வருகிறது. ஜெயலலிதாவின் மகள் யார் என்பது பற்றி ஓ.பி.எஸ்ஸிற்கு தெரியும் என சிலர் வதந்தியைக் கிளப்பி வருகிறார்கள். இதிலும் உண்மை அல்ல. கடந்த 2001ல் தான் ஓ.பி.எஸ்ஸிற்கே ஜெயலலிதாவைத் தெரியும். அப்படி இருக்கும்போது அவருக்கு எப்படி ஜெயலலிதாவிற்கு மகள் இருப்பது பற்றி தெரியும்?

  

TTV dinakaran press meet in kovilpatti

1987ல் வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவர் ஓ.பி.எஸ். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இருந்து சசிகலாவிற்கு அனுப்பிய சம்மன் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ராஜஸ்தானில் பெரிய திருட்டு கும்பலைப் பிடிக்க தமிழக காவல்துறை, 4 பேர் கொண்ட தனிப்படையை அனுப்பியது தவறு. கூடுதல் போலீஸாரை அனுப்பியிருந்தால் பெரியபாண்டியின் இறப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்காது. இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து ஆறுதல் சொல்லவில்லை, ஏன்? யார் வீட்டில் இழவு விழுந்தாலும் பரவாயில்லை, தனக்கு வர வேண்டியது வந்தால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் அவர். தமிழக மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும்  ஆளுநரின் செயல்பாடு முற்றிலும் தவறானது. நீதிமன்றத்தின் 2ஜி தீர்ப்பினால் தமிழக அரசியலில் எந்தவிதமான மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவது இல்லை" என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க