இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ராம்நாத் கோவிந்த், ramnath kovind

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார். இதனால், பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.15 மதுரைக்கு வருபவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லவிருக்கிறார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். குடியரசுத் தலைவர் வருகை காரணமாக அங்குள்ள ரதவீதிகள் மற்றும் சங்குமால் கடற்கரை வரை புதிதாகச் சாலைகள் போடப்பட்டுள்ளன. பின்னர், பேய்கரும்பில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை திரும்பும் அவர் தலைநகர் சென்னைக்குத் தனிவிமானம் மூலம் வருகிறார்.

சென்னையில் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் தங்கும் ராம்நாத் கோவிந்த், மாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவிருக்கிறார். நாளை ராஜ் பவனில் முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கும் அவர், காலை 10.25 மணியளவில் விமானம் மூலம் ஹைதராபாத் செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி தமிழகம் முழுவதும் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!