28 இந்திய மீனவர்களை கைதுசெய்த பாகிஸ்தான் கடற்படை!

மீனவர்கள், fishermen

ல்லை தாண்டி மீன் பிடித்ததாக 28 இந்திய மீனவர்களை கைதுசெய்துள்ளது பாகிஸ்தான் கடலோரக் காவல்படை. மேலும், மீனவர்கள் பயன்படுத்திய ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 28 மீனவர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அரபிக் கடலில் இந்திய - பாகிஸ்தான் எல்லையின் அருகே மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களில் பலர் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி உள்ளது. ஏற்கெனவே, எல்லை  தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பலர் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். இந்நிலையில், இந்தக் கைது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

நேற்று முன்தினம் பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி பைசல், “நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் உள்ள 291 மீனவர்கள் வரும் 29ம் தேதி மற்றும் ஜனவரி 8-ம் தேதி விடுவிக்கப்பட்டு வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்”, எனக் கூறியிருந்தார். இந்நிலையில்தான், 28 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 400-க்கும் அதிகமான இந்திய மீனவர்களை கைது செய்திருக்கிறது பாகிஸ்தான் கடலோரக் காவல்படை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!