ஜெ., வீடியோ விவகாரம்.. வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | Chennai sessions court rejects vetrivel’s anticipatory bail petition

வெளியிடப்பட்ட நேரம்: 06:12 (23/12/2017)

கடைசி தொடர்பு:10:44 (23/12/2017)

ஜெ., வீடியோ விவகாரம்.. வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன்ஜாமீன், bail

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை இரண்டு நாள்களுக்கு முன்னர் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் வெற்றிவேல். சிகிச்சை பெறும் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில், வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுபற்றி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, “ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது ’126 பி’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்” என்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு உத்தரவிட்டார். மேலும், வெற்றிவேல் மீது அண்ணா சதுக்கம், தண்டையார்பேட்டை காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்தான், தன் மீது தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.