’ஜான்சி ராணியே..!’ - கனிமொழியை வரவேற்கும் அடடே போஸ்டர்கள்

கனிமொழி

கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இன்று காலை 11.45 மணிக்கு சென்னை வருகிறார்கள். டெல்லியிலிருந்து விமானத்தில் வரும் அவர்களை, சென்னை விமானநிலையத்துக்குச் சென்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்கிறார். 

திமுக

2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் ஆ.ராசாவிற்கு சென்னை விமானநிலையத்தில் பிரமாண்ட வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை முதலே திமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் திரளத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே கனிமொழியைப் புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என விமானநிலையம் களைகட்டுகிறது. 

கனிமொழி

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!