கனிமொழி, ஆ.ராசா சென்னை வந்தனர்! - களைகட்டும் பறையாட்டம்

கனிமொழி

கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சென்னை வந்தனர். டெல்லியிலிருந்து விமானத்தில் வந்த அவர்களை, சென்னை விமானநிலையத்துக்குச் சென்று வரவேற்றார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்.  

கனிமொழி

parai
Image Courtesy - LokPria Twitter Page

கனிமொழி மற்றும் ஆ.ராசாவிற்கு சென்னை விமானநிலையத்தில் பிரமாண்ட வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என விமானநிலையம் களைகட்டுகிறது. விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக விழா மேடையில் கனிமொழி மற்றும் ஆ.ராசா தொண்டர்களைச் சந்திக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்திக்க உள்ளனர். கோபாலபுரத்தில் பிரமாண்ட வரவேற்பளிக்க உள்ளனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பறை இசை கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

கனிமொழி

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!